திரு.ரவி நவீனன் எழுதிய அஞர் – சிறுகதை தொகுப்பு வெளியீட்டுவிழா
ரவி நவீனன் அவர்களின் அஞர் நூல் வெளியீட்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பற்பல பிரமுகர்கள் பிரபல எழுத்தாளர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர். நண்பர் உரத்த சிந்தனை உதயம் ராம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாலசலடில்யன் நிரலுரை செய்தார். நல்ல மெதுவடை காபிக்குப் பின்னர் சரியாக 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நூலினை திரு தயாளன் வெங்கடாசலம் வெளியிட பேனாக்கள் பேரவையின்...