தமிழகம்

ராஜபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தை குடித்து தற்கொலை

84views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி பார்வதி (41). கடந்த சில மாதங்களாக பார்வதிக்கு கடுமையான தலைவலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
தொடர் தலைவலியால் மிகவும் சிரமப்பட்டுவந்த அவர், வீட்டில் இருந்த அமிலத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்வதி, சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!