தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

98views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (51). இவரது மகன் முத்து (24). இவர் முதுகலை பட்டம் பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முத்து விபத்து ஒன்றில் சிக்கினார். விபத்திற்கு பின்பு அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் மன விரக்தியில் வீட்டில் இருந்து வந்த முத்து, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, முத்துவின் உடலை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!