தமிழகம்

மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நாற்காலியில் பள்ளி மாணவி அமர வைத்து ஆசையை நிறைவேற்றிய அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

120views
மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அருகில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து காவல்துறை சம்பந்தமான விழிப்புணர்வுகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் நிலையங்களில் வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி, கேள்விக்கு பதில் அளிக்கும் போட்டி என பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டது.
அதன் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தடுப்பு சட்டம் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புச் சட்டம் மனித உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களை தெரிவிக்கும் வண்ணம் நடைபெறுகிறது.
அதன்படி மதுரை காவல் துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் அவனியாபுரம் உதவி ஆணையர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சேதுராமன் மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டியை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் பரிசுகள் அளித்து சிறப்பிக்கிறார் இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணிகா அவரது போலீசாக வேண்டும் எனும் கனவையும் ஆய்வாளராக நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசையை கேட்டறிந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் அவரது இருக்கையில் அமர வைத்து ஆசையை நிறைவேற்றினார்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக வருகை தந்த பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆய்வாளரின் இந்த செயல் பள்ளி மாணவர்கள் மற்றும் சக காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!