தமிழகம்

உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டியில் நூற்றாண்டு கடந்த சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

90views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் முடிவால் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் செல்லம்பட்டிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செல்லம்பட்டி பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்குவதற்கு தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால் அதனை கண்டிக்கும் விதமாக சிந்துபட்டி காங்கேயநத்தம் வெங்கடாச்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து சிந்து பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போலீசார் போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!