தமிழகம்

நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம்.

29views
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து புகார் எழுந்தது.
பெரியகுளம் நகராட்சி பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் நகராட்சியும் மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை இணைந்து நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையத்தில் கால்நடை மருத்துவர் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மூன்று நாட்கள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரித்து பின்பு நாய்கள் எந்த பகுதியில் பிடிக்கப் பட்டனவோ அந்த பகுதியில் மீண்டும் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டு நாய்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளதகவும் நகராட்சி ஆணையாளர் புனிதன் தெரிவித்தார்.
இந்த முகாமில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்களை நாயின் உரிமையாளர்களே அழைத்து வந்து கருத்தடை செய்வதற்கு ஆர்வத்துடன் கொண்டு வந்து கருத்தடை செய்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!