இலக்கியம்சிறுகதை

காக்கை குருவி எங்கள் ஜாதி…

100views
விடியல் காலை ஐந்து மணி..
ஏர்க்கலப்பையை தோளில் சுமந்தபடி கிளம்பினார் சின்னையா.
பெரிய லோட்டா நிறைய நீராகாரத்தை நீட்டி இதைக் குடிச்சிட்டு கிளம்புங்க.. நெற்றியில் திருநீறு பூசியபடி வந்தவர் திண்ணையில் அமர்ந்து நீராகாரத்தை பருகியவர் பன்னண்டு மணிக்கு சாப்பாடு எடுத்து வந்துடு புள்ள.. இப்பல்லாம் பசி தாங்க முடியல.வெளவெளன்னு வருது.
சரிங்க மாமா.. பத்து மணிக்கு அந்த வேலுப்பயலை கொஞ்சம் அனுப்பி வைங்க.. நான் கேப்பைக்கஞ்சி கொடுத்து அனுப்பறேன்.அலுப்பு பாக்காம குடிச்சிட்டு வேலை பாருங்க.. வேலை செய்ய உடம்பில தெம்பு வேணாமா?
12மணிக்கு சோறு எடுத்தாறேன்.நீங்க தெம்பா இருக்கனுமுல…
சரிம்மா.. அதுக்கு நீ ஏன் கண்ணு கலங்குற?  காலையில இப்படி வழி அனுப்பினா நான் எப்படி நிம்மதியா வேலை செய்ய முடியும்?  நான் நல்லாத்தான் இருக்கேன்.அடிக்கிற. வெய்யிலுல உடம்பு களைச்சிப் போவுது..நீ கவலைப்படாதே.. நான் கிளம்பறேன்..
அவர் தூரமாக மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டு இருந்தவள்,
வைரம் பாய்ந்த உடம்புன்னு நெனைச்சேனே.. இப்படி அடிக்கடி மயக்கம் வருதுன்னு சொல்றாங்களே! ஒரே கவலையா இருக்கே.. அம்மா..தாயே.. மகமாயி!நீதாம்மா காப்பாத்தனும்..

புலம்பியபடி உள்ளே சென்றவள் தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினாள். நண்டு சிண்டா இருக்குதுங்களே..இதுங்களை எப்படி கரை சேர்க்கப் போறேன்?
ன்ன சின்னையா? ஊரே டிராக்டர்ல உழுதுக்கிட்டு இருக்கு! நீ என்னடான்னா இன்னும்  ஏரு… கலப்பன்னு சரியான பொழைக்கத் தெரியாத ஆளாக இருக்கியே! உரம் போட மாட்டேங்குற …பூச்சி மருந்து அடிக்க மாட்டேங்குற …என்னையா நடக்குது?
மாடு வச்சு ஏரு உழும்பொழுது அதோட சாணியே உரமாயிடுது .பூச்சி புழு திங்கிறதுக்கும் சாப்பாடு வேணும் இல்ல.. சாப்பாட்டுக்கு அதுங்க எங்க போவுங்க ? என் வயலுலேயாவது  வயிறு நிறைய சாப்பிடட்டும் .மீந்து போற அரிசி என் குடும்பத்துக்கு போதும். செயற்கை உரத்த அடிச்சு என் வயலை வீணாக்க விரும்பல. என் வயலுக்கு எவ்வளவு கிளி குருவி எல்லாம் வருது! உங்க வயல்ல ஏதாவது ஒன்னு வருதா? நீங்க தான் இத பத்தி எல்லாம் யோசிக்கணும் .நான் சொன்னா எங்க கேக்குறீங்க?
அது சரி …நான் உன்னைய திருந்தச்சொன்னா  நீ என்னைய திருந்தனுமுன்னு சொல்லுற?உன்னை திருத்த முடியாது ..உன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியாது ..ரெண்டு பிள்ளைங்க இருக்கு ..அதுங்கள கர சேர்க்கணும். ரெண்டும் பொட்ட புள்ள வேற பெத்து வச்சிருக்கற? பார்த்து நடந்துக்க …அவ்வளவுதான் நான் சொல்லுவேன் .
பக்கத்து வயலுக்கு சொந்தக்காரரான வடிவேல் சொல்வதையே அந்த ஊரில் உள்ள அனைவரும் கூறினாலும் எல்லோரும் அவரை மனதிற்குள் பாராட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.
தான் வசிக்கும் கூரை வீட்டுக்குள்ளே ஆங்காங்கு நெல் கதிர்களை கட்டி தொங்க விட்டிருப்பார் .அதனை கொத்தி திங்கவரும் புறாக்கள்.. சிட்டுக்குருவிகள் என இவர் வீடு எப்போதும் பறவைகளின் சத்தத்தோடு இருக்கும் .உள்ளே பயன்படுத்தி வெளியேறும் அத்தனை நீரும் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பாயும் . இதனால் எப்போதும் வீட்டை சுற்றி பச்சை பசேல் என தேடிக்கொடிகள் ஏராளமாக செழித்து வளர்ந்திருக்கும். காய்கறிகள். பூச்செடிகள் என ரம்யமாய் இருக்கும் இவரது வீடு …மாடு கோழி வாத்து புறா சிட்டுக்குருவி காகம் குயில் பச்சைக்கிளி என இவர் வளர்க்கும் பறவைகளும் வளர்க்காத பறவைகளும் என ஒரே காச் மூச்சு என்ற சத்தத்துடன் சுற்றி வருவதை பார்க்க ஆச்சரியமாகவும் இருக்கும்.
யல்ல வேலை செஞ்சி அலுத்து போய் சாயந்திரமா வீடு திரும்பினா இதுங்களோட மல்லு கட்றதிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுது …..எல்லாத்தையும் புடிச்சி வித்துர போறேன் …தரகரே! நல்ல ஆளா இருந்தா சொல்லுங்க …வாங்கி அடிச்சுகிட்டு சாப்பிடுறவங்க வேண்டாம்! பிள்ளைங்க மாதிரி வளத்துட்டோம்..அவங்களும் வளர்க்கறவங்களா இருக்கனும் புரியுதா ?
சரிமா பார்த்து சொல்றேன் !
அவர் கிளம்பவும் சின்னையா உள்ளே வரவும் சரியாக இருந்தது.இவன் ஏன் இங்கே வந்துட்டு போறான்?
 சும்மாதான்… ரோட்டோரமா போனாங்க ..என்னை பார்த்ததும் சும்மா விசாரிச்சிட்டு போறாங்க …மோரு ஒரு வாய் கொடுத்து அனுப்பி வைச்சேன்.
அப்படியா !சரி ….
இடத்தை சுத்தப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி எல்லாத்துக்கும் தீனி போட்டு அதுங்களோட கொஞ்சி சிரிச்சு உள்ளே வர குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள்.

என்னடா செல்லங்களா !வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சிட்டிங்களா ? ஓடியாங்க.. அப்பா கூட சேர்ந்து சாப்பிடலாம்.
ஓடி வந்த குழந்தைங்க அப்பா அம்மா மாடு கண்ணு ஆடு கோழிஎல்லாத்தையும் விக்க போகுதாம்! என்று ரகசியமாக காதில் செல்ல …அதான் சங்கதியா? அவ சும்மா சும்மான்னுஅத்தனை சும்மா போட்ட ப்பவே ஏதோ இருக்குனு நினைச்சேன். சரி நான் பாத்துக்கிறேன் .நீங்க போய் தூங்குங்க
.எல்லாவற்றையும் கூட்டி மெழுகி விட்டு படுக்கைக்கு வர மணி 11 ஆக்கிவிட்டது.
 .என்னங்க !இன்னும் தூங்கலையா? உடம்புக்கு எதாவது செய்யுதா ?  டாக்டர்கிட்ட போவோமா ? என்று பரபரப்புடன்  கைவைத்து பார்த்தவுடன் கையை மெதுவாக எடுத்து விட்டவர் எனக்கு புதுசா வியாதி வெளியே இருந்து வரும் வரணுமா?  நீ தான் என்னோட இதயத்தை எடுத்து தூரமா எரிய பாக்குறியே ! என்றார்.
 ஐயோ! என்னங்க இப்படி சொல்றீங்க ? உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைச்சி நான் கதி கலங்கிக் கிடக்கிறேன் ..இப்படி பேசுறீங்களே ?
நான் எப்ப உடம்பு சரியில்லைன்னு சொன்னேன்?
பசி தாங்க மாட்டேங்குது ..12 மணிக்கு எல்லாம் சோறு கொடுத்து விடுன்னு சொன்னிங்களே! அட கடவுளே! வெயிலில ஏறுகலப்பை இழுத்து உழறதில களைப்பா தெரியுது.. வயசும் ஆவுதில்லை.. 20 வயசு குமரனா நானு? அதனால கொஞ்சம் சீக்கிரம் சாப்பிட்டா பரவாயில்லைன்னு சொன்னா நீ என்னடா நான் உயிருக்குயிரா நேசித்து வளர்த்துக்கிட்டு இருக்கிற ஜீவன்களை விக்கிறதுக்கு விலை பேசுற?
இல்லீங்க… அது வந்து.. நான்…வயலுலயும் வேலை செய்யுறீங்க… அலுத்து போய் சாயந்திரமா வீட்டுக்கு வந்து அதுங்களோட மல்லுக்கு நிக்கிறீங்க.. அதனால்தான்….
அட..அசடு!…சொல்லப்போனா எனக்கு வர வியாதியை தடுத்து நிறுத்தறதே அதுங்க தான்.. அதுங்களோட கொஞ்சி சிரிச்சு பேசும் போது நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறேன்னு தெரியுமா? அவங்க இல்லேன்னா இரண்டே நாளுல படுத்தப் படுக்கையா ஆயிடுவேன்.பரவாயில்லையா ?
ஐயய்யோ… என்னங்க நீங்க இப்படி பேசுறீங்களே?
பின்ன. … வாய் பேச முடியாத ஜீவன்னு நாம நினைக்கிறோம். ஆனா நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்குதுன்னு நீயும் பாக்குற இல்ல.. சும்மா போட்டு அலட்டிக்காம நீயும் அதுங்களோட விளையாடி பாரு …பிறகு உனக்கு தெரியும் …இத்தனை மனது கஷ்டமும் உனக்கு வராது புரியுதா ? நம்ம பிள்ளைங்க கூட நீ இதுங்கள வித்துவிடுவியோனு கவலைப்படுதுங்க ..எல்லாரையும் கவலைப்படுத்திட்டு நீ என்னமா செய்யப் போற ? தயவு செஞ்சி எங்களை பிரிச்சிடாதே. உன்னை கெஞ்சி கேட்கிறேன்
ஐயோ என் ராசாவே! உங்க சந்தோசம் இதில் தான் இருக்கிறதைப் புரிஞ்சுக்காம உங்களுக்கு கஷ்டமா இருக்கேன்னு நினைச்சி இப்படி செஞ்சிட்டேன்..என்னைய மன்னிச்சிடுங்க என்று கூறி அழுதவளை மார்போடு அணைத்துக் கொண்டார்.
அம்மா என்றால் அம்மா தான் என்று கூறியபடி ஓடி வந்து கட்டிக்கொண்ட மகள்களை நீங்க இன்னும் தூங்கலையா ? என்று கேட்க எங்க பிரண்டை எல்லாம் வித்துவிடுவீர்களோ என்று பயமா இருந்துச்சு மா
வெறும் விலங்குகள் என நாம் நினைக்க இவர்களோ அவைகளை உயிரோடு மதித்திருக்கிறார்கள் என்பது புரிய இனிமேல் எனக்கும் அவங்க குழந்தைகள் தான்.என்றாள் தெளிவாக.
கவிதாயினி. கலாவிசு
புதுவை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!