விளையாட்டு

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

23views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டிகளை கல்லூரியின் துணை முதல்வர் முஸ்தாக் அஹமது கான் துவக்கி வைத்தார். 20 அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் சென்னை காவல்துறை அணி முதல் பரிசும், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் பரிசும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி மூன்றாம் பரிசும், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கோப்பையை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மலேசியா பாண்டியன் அவர்களும், கோட்டையூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் அவர்களும் வழங்கினர். இவ்விழா கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இளையான்குடி காவல்நிலைய ஆய்வாளர், மணிகண்டன் அவர்களும், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அப்துல் சலீம், பேராசிரியர்களும், அலுவலர்களும், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் கைப்பந்து வீரர்கள் செய்திருந்தனர். இறுதியாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!