தமிழகம்

உசிலம்பட்டியில் வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த 6அடி நீளமுள்ள சாரை பாம்பை சிவாலயம் அறக்கட்டளை நண்பர்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

177views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதியார் தெருவில் வசித்து வரும் லின்சி சசி. இவர் நகராட்சி 22வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் இவரது ஓட்டு வீட்டின் கூரையின் மேல் சத்தம் கேட்டதை பார்த்த லின்சி சசி என்னவென்று பார்த்தபோது வீட்டின் கூரை மேல் ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு பதுங்கி இருப்பதைப் பார்த்து பதறி உடனடியாக தன்னுடைய நண்பரான பாம்பு பிடிக்கும் உசிலம்பட்டி சிவாலயம் அறக்கட்டளை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சிவாலயம் அறக்கட்டளை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பிரேம்; வீட்டின் கூரைமேல் பதுங்கி இருந்த 6 அடி சாரைப்பாம்பு பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின் வனக்காப்பாளர் சூர்யா தலைமையில் பாம்பு அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!