சிறுகதை

முதுமை

364views
உறவினருக்கு ஒரு மருத்துவ எமர்ஜென்ஸி. காலைலயே நானும் மனைவியும் பில்ராத் மருத்துவமனைக்கு வந்தாச்சு.
அவங்களுக்கு ஸ்கேன்லாம் எடுக்கனும்னு சொல்லி..
அத எடுத்து முடிச்சதும் ரிசல்ட் வர ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க..
சரி என நானும் வீட்டம்மாவும் வெளில வந்து உட்கார்ந்துட்டு இருந்தோம்.
எத்தனை முறை இங்க வந்திருக்கோம்..
எவ்ளோ பெரிய பெரிய ஆப்ரேஷன்லா கடந்து வந்திருக்கோம்னு..
இந்தியாவிலேயே முதல் முறையா உனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்ததை வீடியோவா எடுத்து வெச்சாங்க..
ஏன் அப்டினு கேட்டதுக்கு அடுத்து இந்த மாதிரி கேஸ் வந்தா உபயோகமா இருக்கும்னு..
சொன்னாங்க.. இப்டி நெறய ஞாபகங்கள்.
அப்போதான் அந்த பெரியவர்..
ஒரு பெரிய பைய ஷோல்டர்ல மாட்டிட்டு..ஒரு கையில் ரிப்போர்ட் ஃபைல்..வாக்கிங் ஸ்டிக்கோட ரெஸ்ட் ரூம் பக்கம் போனவர நாங்க பாத்துட்டு இருந்தோம்..
அப்டியே சட்டுனு நின்னவர்..
‘இதெயெல்லாம் கொஞ்சம் பாத்துக்க முடியுமா?
இதோ உள்ள போய்ட்டு வந்திடுறேன்” என்றார்.
கொடுங்க ஐயா. நான் வெச்சுக்றேன். நீங்க போய்ட்டு வாங்க..என்றேன்.
ரிப்போர்ட்டின் மேல் ராஜேஸ்வரி என்று எழுதியிருந்தது.
சிறிது நேரத்தில் வந்து
“ரொம்ப தேங்க்ஸ்..தம்பி” என்றார்.
பரவால்லங்க ஐயா..இந்தாங்க..
என்றேன்.
அவரின் சிறு தடுமாற்றத்தை பார்த்த மனைவி “கூட யாரும் வரலையா? என்றாள்.
அட..ஒன்னுமில்லம்மா..
எனக்கு 85 வயசுதான் ஆகறது.. வொய்ஃக்கு 83 ஆகுது..
காலைல கொஞ்சம் மயக்கம் வந்துடுத்து
அன்கான்ஸியஸ்..
அதான் நானே அவள கூட்டிட்டு வந்தேன். என்றார்
பசங்க யாரும் இல்லையா?
கூட வரலையா!?
(இந்த கேள்விய ஏன்மா கேட்ட என்று நினைத்துக்கொண்டேன்)
இல்லம்மா..அவன் கல்பாக்கத்துல இருக்கான்..
எதோ ரொம்ப முக்கியமான ஆபீஸ் வேலையாம்..
வர லேட்டாகும்னான்
..இருக்கட்டும் நானே பாத்துக்றேனு சொல்லிட்டு இவள கூட்டிட்டு வந்துட்டேன்.
நான் வேணும்னா அவர் வரும் வரை கூட இருக்கட்டுமா ஐயா..
என்றேன்..
இல்லப்பா..வேண்டாம்..
பரவால்ல..பழகிடுச்சு..
அவ அங்க தனியா இருப்பா.. நான் வரட்டுமா..தேடுவா.. என்று புன்னகைத்துக்கொண்டே
விடைபெற்றார்.
நான் மெல்ல திரும்பி
“பார்த்தியா இதுதான் அன்பு”
“இப்டிதான் இருக்கனும்” என்றேன்.
காலைல என்ன விட்டு வடை சாப்ட போனது யாரு? என்றாள்.
என் காதில் எதுவும் விழவில்லை..
உங்களுக்கு எதாச்சும் கேட்டுதா?
பூவேந்தன்

1 Comment

  1. வெறும் வடை மட்டுமா,நெய் ரோஸ்ட் சாப்டதை மறைச்சாச்சா?
    சுஶ்ரீ

Leave a Reply to Srinivasan Subramaniam Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!