தமிழகம்

செங்கோட்டை இராணுவ வீரரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி

98views
செங்கோட்டை பகுதியில் இராணுவ வீரருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சந்திரசேகரின் நினைவிடத்தில் செங்கோட்டை நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நன்னூலகர் இராமசாமி தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆதிமூலம், ஆசிரியர் சுதாகர், விழுதுகள் சேகர், முத்தரசு, மாரீஸ், விக்னேஷ் ஆகியோருடன் முன்னாள் மாணவர் சங்கத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு, துரைராஜ், ஆறுமுகம், அசோக், அரசரமரம் மன்சூர் அலி, பஷீர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் வழக்கறிஞர் அபு, மதினா ஹோம் அப்ளையன்ஸ் காதர் மைதீன், அரசு விரைவு போக்குவரத்து பணிமனை தம்பு ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்ச்சியில் இராணுவ வீரரின் மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!