146views
எஸ் டி பி ஐ கட்சியின் கீழக்கரை நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் முடிவெடுக்கப்பட்டது இதில் இன்றிலிருந்து புதிய நகர் தலைவராக செய்யது அபுதாஹிர் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நகர் செயலாளர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். நகர் துணை செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி உரையாற்றினார்.
இதில் துணைத் தலைவர் ரீகான் துணை செயலாளர் சிபாய் பொருளாளர் சாதிக் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ஜலீல் ஹாஜா அலாவுதீன் இப்ராஹிம் ஷா பாரூக் மாமா சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.






