தமிழகம்

வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம்

531views
கோரிப்பாளையம் ஜம்புராபுரம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது.  துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, கலந்து கொண்டு வடக்கு மாவட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பொது செயலாளர் ஜியாவுதீன் அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் ஆகியோர் சிறப்பாக சமர்ப்பித்தனர்.  மாவட்ட பொருளாளர் ரகுமான், செயற்குழு உறுப்பினர்கள் சீனி சிக்கந்தர், முகமது தாஹா, ஆகியோர் தீர்மானங்கள் வாசித்தனர்.
1- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை மருத்துவமனை அமைந்துள்ள எதிர் சாலை பகுதியில் பார்க்கிங்காக மாறியுள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது முக்கியமான நேரங்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஆகவே போதிய பார்க்கிங் வசதி மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் ஏற்படுத்தி தர கோரிக்கை.
2- மதுரை நகர்ப்புற பகுதி அப்போலோ சந்திப்பு மற்றும் கோரிப்பாளையம் சந்திப்புகளில் வாகனங்கள் அதிக நேரம் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் மதுரை நகரில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது ஆகவே மக்களுக்கு இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு அப்போலோ சந்திப்பு மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் மேல் மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3- மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடாக உள்ளது இதன் மூலம் டெங்கு போன்று தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது ஆகவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பொதுக்குழுவில் தொகுதி வார்டு ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!