தமிழகம்

சிறப்பு பூங்காவில் சமூக நல அறக்கட்டளை சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

85views
மதுரை மாவட்டம் புதூர் தாமரை தொட்டி அருகில் அமைந்துள்ள சிறப்பு பூங்காவில் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  மேலும் இந்நிகழ்வில் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்..,மற்றும் வழிகாட்டி மணிகண்டன் அறக்கட்டளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,பலசரக்கு சாமான்கள்  வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார்..
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!