தமிழகம்

பள்ளி மாணவ மாணவியருக்கு சாகசம் பல் திறன் போட்டிகள் எஸ்.பி.ஜே பள்ளி கோப்பையை தட்டி சென்றது

110views
பள்ளி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற சாகசம் பல் திறன் போட்டியில் எஸ்.பி.ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோப்பையை தட்டி சென்றது. மதுரை மேற்கு ரோட்டரி சங்கமும் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து மாணவ மாணவிகளுக்கான *சாகசம்* பல் திறன் போட்டிகள் வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 15 பள்ளிகளை சேர்ந்த 350 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். பேச்சுப்போட்டி இசைப்போட்டி குழு நடனம் நாடகம் உட்பட 21 போட்டிகள் நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 3000 இன்ட்ராக்ட மாவட்ட தலைவர் அபுதலிப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மதுரை மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். 350 மாணவ மாணவிகள் இதில் பங்கேற்று தனித்திறனை வெளிப்படுத்தினர். இதில் அனைத்துப் போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று மதுரை எஸ். பி.ஜே பள்ளி வின்னர் கேடயத்தையும் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரன்னர் கேடயத்தையும் பெற்றது. மாலை பரிசளிப்பு விழாவிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவியருக்கு முதல் மூன்று பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.

மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் நெல்லை பாலு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ராஜன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் ரவி பார்த்தசாரதி பள்ளி முதல்வர் பாக்ய பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜன் மெட்ரிக் பள்ளி இன்ட்ராக்ட் தலைவர் சூரிய வர்ஷினி மற்றும் பள்ளி மாணவர் தலைவர் ராகுல் அரவிந்த் ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!