தமிழகம்

அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது – சார்பு ஆய்வாளர் திலிபன் சமுக நீதி குறித்து இளைஞர் களுக்கு விழிப்புணர்வு பேச்சு.

41views
அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சமூக நீதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 80 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் ஒன்பதாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் தினம் ஆன இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது நிலாவில் உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமை தாங்கினார் சமூக நீதி பண்பாட்டு மைய தலைவர் சிவனாண்டி ஒருங்கிணைப்பாளர் ஓவியஸ் கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சமூக நீதி பொங்கல் விழாவில் 80க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.  அனைத்து பொங்கல் பொங்கல் பானைகளிலும் பொங்கல் எடுத்து விழாவிற்கு வந்த அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது
விழாவிஉயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமை தாங்கினார் மற்றும் ரேக்ளா ரேஸ் மாட்டுவண்டி சங்க தலைவர் மோகன்குமார், கவுன்சிலர்கள் கருப்பசாமி, முத்துலெட்சுமி அய்யனார். இன்குலாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.  விழாவில் கலந்துகொண்ட அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திலிபன் பேசுகையில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் அனைவரும் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி  .  இன்றைய இளைஞர்கள் பணம் புகழ் சினிமா என செல்லாமல் ,  இளைஞர்கள் கல்வி கற்று மேன்மையான சூழ்நிலையை உருவாக்கி அதில் சமத்துவமான வாழ்க்கை வாழ வேண்டும் அனைவருடனும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.  இளைஞர்கள் அனைவருடனும் சமத்துவமாக இருந்தால் சமூக நீதி உருவாகிவிடும் . எனக் கூறினார்.
இன்றைய இளைஞர்களுக்காக சமூக நீதி குறித்து அவனியாபுரம் காவல் சார்பு ஆய்வாளர் திலிபன் பேச்சு விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!