தமிழகம்

பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கழகத்திற்கும், கழக ஒன்னரை கோடி தொண்டர்களுக்கும் வரலாற்று சிறப்பை எடப்பாடியார் பெற்று தந்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் உதயகுமார் பெருமிதம்

144views
கழக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் ஆணைகிணங்க, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளிட்டவற்றால், மக்களை வாட்டி வதைத்து வரும், விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வருகின்ற 9ம் தேதி பேரூராட்சி பகுதியிலும், 13ம் தேதி நகராட்சிகள் பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் பாரதப் பிரதமர் தலைமையில் ஜி-20 மாநாட்டிற்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற எடப்பாடியாருக்கு பாராட்டு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் மக்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும், வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் 51 திருமணத்திற்கான முகூர்த்த நாள் நடுப்பணி வருகின்ற 11ஆம் தேதி நடைபெறுகிறது இதில்அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்ததால் வரும் 7 ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஏற்படும் கனமழைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு உலக தலைவர்கள் தலைமை பொறுப்பேற்று நடத்துவார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஜி-20 மாநாட்டை நமது இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும்.
இந்த மாநாட்டிற்கான அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விட்டது. அதனை தொடர்ந்து நமது கழகத்தின் சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அவர் பங்கேற்று நமது இயக்கத்திற்கு மாபெரும் வரலாற்று பெருமையை தேடித் தந்துள்ளார்.
இதன் மூலம் இந்த இயக்கத்திற்கும், கழக ஒன்னரை கோடி தொண்டர்களுக்கும், மிகப்பெரிய கௌரவத்தை எடப்பாடியார் பெற்றுத் தந்துள்ளார் .எடப்பாடியாரின் வெற்றி மென்மேலும் தொடர புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியும், தொண்டர்கள் ஆதரவும், மக்கள் பேராதரவும் அவரின் கரத்தை மேலும் பலப்படுத்தும். இதன் மூலம் கழகத்திற்கு மாபெரும் வலிமையை உருவாக்கித் தந்துள்ளார். அவருக்கு கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இதனை மீண்டும் திரும்ப பெற வலியுறுத்தியும் வரும் 9ஆம் தேதி மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் ,13ஆம் தேதிஅனைத்து நகராட்சி பகுதிகளிலும், 14ஆம் தேதி அனைத்து ஒன்றிய பகுதிகளும் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும் பெரும் திரளாக பங்கேற்க செய்திட வேண்டும்.
கழக அம்மா பேரவையின் சார்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி 51 ஏழை,எளிய மணமக்களுக்கு தனது பொற்கரங்களால் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து வரும் 11ஆம் தேதி இதற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கிறார்கள்.
தற்போது வங்க கடலில், புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மாண்டஸ் என்ற பெயருடன், புதிதாக புயல் உருவாகி இதனால் 7 ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனத்த மழையும், சில மாவட்டங்களில் அதிகமான மழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால அடிப்படை எடுத்து உயிர்பலி இல்லாத பேரிடரை எதிர் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!