தமிழகம்

மருத்துவ துறையில் உள்ள 24×7 தற்போது மதுவிற்பனையிலும் உள்ளதால் இளைய சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

107views
டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயிர் நீதிமன்ற கிளை பரிந்துரைை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசு கையாண்டு வருகிறதோ என்கிற, மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.
மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது .இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் நேர கட்டுப்பாடு இன்றி விற்கப்படுவருக்கின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் உடைய அமைச்சருக்கு சொல்லுகிறதோ, என்று திமுக கட்சிக்காரர்களே பேசிகொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து குரல் எழுப்பி,புகார் மனுவாகவும் கொடுத்துள்ளார்.  இன்றைக்கு விஞ்ஞான ரீதியான ஊழல்களை, இந்த துறையின் மூலமாக செயல்படுத்துகிறார்கள் என்பது, நாடு முழுவதும் பேசுகிற ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக செலுத்தாமல், மதுபானங்கள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது. அதாவது ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப்படாமல் அரசுக்கு கணக்கில் வராமல் மதுபானங்கள் கடத்தப்படுகின்றன. கணக்கில் வராத இந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஆட்சியாளர்களுக்கு செல்கிறது. இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு புகார் மனுவை ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு விரிவாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மதுபான கொள்ளை ஊழலின் உச்சத்திற்கே மாநிலத்தை அழைத்துச் சென்றிருக்கிறது வேதனையளிக்கிறது.
இன்றைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் இன்றைக்கு இந்த மதுபான விற்பனை அதிகரிப்பால், அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது அவருடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை வேதனையோடு வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
அரசு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதேபோன்று நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.
24×7 என்று மருத்துவத்திற்கு தான் நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் மது விற்பனைக்கு 24×7 நாம் பார்த்ததில்லை இதை கண்டு நாடு இன்றைக்கு சிரிப்பாய் சிரிக்கிறது.
இந்த 24×7 மது விற்பனையால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுளளது.
அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவேண்டும்.  எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலே மதுபானங்கள் திறப்பது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எனது தொகுதியான திருமங்கலத்தில் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தியதை இந்த நாடும்,இந்த நாட்டு மக்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!