தமிழகம்

மதுரையில் காவலர் குடியிருப்பில பெண் காவலரிடம் வழிப்பறி. பரபரப்பு சிசிடிவி காட்சி

279views
மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்ககூடிய வெள்ளியம்மாள் என்ற ஆயதப்படை பெண் காவலர் நேற்றிரவு பிபி குளம் பகுதியில் இரவு காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு தனது குழந்தையுடன் நடந்துவந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெண் காவலர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கலியை பறித்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்பொழுது அந்த பெண் செயினை பிடித்துகொண்ட நிலையில் நான்கரை பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் நகை வழிப்பறி செய்த போது இரு சக்கர வாகனத்தை பெண் காவலர் விரட்டிசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!