தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை

74views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
தென் திருக்கைலாயம் என அழைக்கப்படும்  காசி விசுவநாதர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இரும்பு பீரோவை உடைத்து  கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  மேலும் அங்கிருந்து சிசிடிவி கேமராவின் மீது விபூதியை ஊதிவிட்டு சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் எனப்படும் முக்கிய பதிவுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர் .
இது குறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!