தமிழகம்

வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை பணம் கொள்ளை

119views
மதுரை அருகே, பெருங்குடியில் வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை வெள்ளி கொலுசு பணம் கொள்ளை அடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே வலையபட்டி ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாண்டி 42. இவர், சம்பவத்தன்று மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டுவேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பினார்கள். அப்போது, அவர்கள் வீட்டை அடைந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நாற்பத்து நான்கரை பவுன் தங்க நகைகள், சில்வர் கொலுசு ஒரு ஜோடி, பணம் ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாண்டி ,பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்  பதிவு செய்து அவர், வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!