கட்டுரை

என் ஆத்திசூடி – நூல் விமர்சனம்

409views
நூலின் பெயர் : என் ஆத்திசூடி
நூல் ஆசிரியர் : சு.த.குறளினி ( வயது 13 )
வகுப்பு : 8
முதற்பதிப்பு : பிப்ரவரி 2020
ஓவையின் ஆத்திசூடி, பாரதியின் ஆத்திசூடி தெரியும். அதென்ன ‘என் ஆத்திசூடி’… தற்போது +1 படித்துக் கொண்டிருக்கும் இளந்தளிர் குறளினியின் ஆத்திசூடி தான் இது.
குழந்தைகளுக்காக ஒரு குழந்தையே எழுதி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இளம் எழுத்தாளர் குறளினியின் படைப்பாற்றல் இன்றைய நவீன ஆத்திசூடியாக மிளிர்கிறது.
இவரின் பெற்றோர்கள் சிறப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதற்க்குச் சான்றாய் உள்ளது அவர்களே எடுத்த வண்ணப் புகைப்படங்கள்.
‘அன்பே அழகு ‘ என்று அன்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியிருக்கும் ஆத்திசூடி எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்.
இன்றைய காலத்தில் குழந்தைகள் நூல்களைப் படிப்பதே அரிது இந்நூலை வாசிக்கும் போதே குறளினியின் வாசிப்பு வெளிப்படுகிறது.
“ஈன்றோரைக் காத்து நில்”
“சொல்லை உணர்ந்து சொல்”
“கைகளை நம்பு”
“கொள்கையுடன் வாழ்”
“நேரம் போற்று
நோக்கமே ஆளுமை”
என்று தான் கூற நினைப்பதைச் சுருக்கிக் கூறி இளம் தலைமுரையினருக்கு ஏற்ற ஆத்திசூடியைப் படைத்துள்ளார்.
தன் எண்ணங்களை கவிதையாய்ப் படைத்திருக்கும் இளம் எழுத்தாளர்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்…

சரண்யா சண்முகம்
ஈரோடு

3 Comments

Leave a Reply to onzcHNrLPAsx Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!