தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநகராட்சி கவுன்சிலர் திருக்குறள் புத்தகம் வழங்கியும் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

95views
மதுரை மாநகராட்சி வார்டு எண் 70 துரைசாமி நகர் மக்கள் நலச் சங்கம், வேல்முருகன் நகர் மக்கள் நலச் சங்கம் மூலம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு இரண்டு சங்க கட்டிடங்களில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து ,மரக்கன்றுகள் நடவு செய்து , நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பிய திருவள்ளுவரை போற்றும் விதத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட 250 குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் தனது சொந்த செலவில் மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி வழங்கினார். மரக்கன்றுகளும் திருக்குறள் புத்தகங்களும் வழங்கிய மாமன்ற உறுப்பினருக்கு சங்க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் .

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!