தமிழகம்

இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட இ எஸ் ஐ காலனியில் கிராம சபை கூட்டம் .கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள். தீர்மானம் வாசிக்காமல் தீர்மான நோட்டில் கையெழுத்து வாங்கியதால் பரபரப்பு

31views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இ எஸ் ஐ காலனி பகுதியில் நாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து தலைவர் இசக்கிராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறற்று கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி கிளர்க் பாஸ்கரன் நான்காவது வார்டு மெம்பர் பஞ்சவர்ணம் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
கிராம சபை கூட்டத்தில் தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் பல்வேறு வேலைகள் பாதியில் நிற்பதாகவும் குறிப்பாக நான்காவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் சாலை வசதிகள் பெண்களுக்கு கழிப்பறை மற்றும் வசதி செய்து தரவில்லை பலமுறை கோரிக்கை வைத்தும் பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அப்பகுதி பெண்கள் பஞ்சாயத்து தலைவரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கிளர்க் பாஸ்கரன் அவருடைய உதவியாளர்களை வைத்து தீர்மானம் எழுதாமல் தீர்மான நோட்டில் கையெழுத்தை தட்டி கேட்டடு தீர்மானம் வாசிக்காமல் கையெழுத்து வாங்க கூடாது என கேட்டு நபருக்கும் மற்றொரு திமுக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தட்டி கேட்ட நபரை சங்கை அறுத்து விடுவேன் என கூறிமிரட்டல் விடுத்தார் .
இதனால் அப்பகுதி இருந்த பெண்களுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறை இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர் மேலும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவரை அப்போதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கிராம சேவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!