தமிழகம்

புதுச்சேரி மர்கஜ்- அல் இஸ்லாஹில் 74வது குடியரசு தினம் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்

152views
புதுச்சேரி, மனப்பட்டில் இருக்கும்- மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் அதன் நிறுவனத் தலைவர் அஷ்ஷெய்கு சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி அவர்கள் தலைமையில், 26.01.2023 வியாழக்கிழமை, குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சு. பாவானன் கலந்து கொண்டு காலை 10:00 மணியளவில் கொடியேற்றி, சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நிறுவனர் – சமூக நல்லிணக்க முன்னணி இனாமுல் ஹசன் தேச நலனில் முஸ்லிம்களின் பங்கு அன்றும் , இன்றும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் மூலமாக இந்திய குடியரசிற்காக நம் முன்னோர்கள் எப்படி பாடுபட்டார்கள், போராடினார்கள் என்பதை பற்றிய பல்வேறு புதிய பல தகவல்களை மாணவர்களுக்கு மத்தியில் பரிமாறினார்கள். இதன் மூலமாக மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!