தமிழகம்

உசிலம்பட்டியில் மழையினால் சாலையில் ஏற்ப்பட்ட பள்ளங்களை தானே சரி செய்த போலிசார்

82views
வளி மண்டல சுழற்ச்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.இம்மழையில் சாலைகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்; உசிலம்பட்டி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை மழையினால் குண்டும் குழியுமாக காட்சியளித்து விபத்துகள் நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்தது. நிலையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பணி புரியும் மதுரை எஸ்பி தனிப்பிரிவு செல்வம் போக்குவரத்து எஸ்ஐ சவுந்தர பாண்டியன் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கருப்பசாமி ஆகியோர் தனது சொந்த செலவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை மணல் கொட்டி தாங்களே களத்தில் இறங்கி சாலையை சரி செய்தனர்.இது பொதுமக்கள் இடையே மிகவும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து செல்கின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!