தமிழகம்

சிவகாசி பகுதியில் சாரல் மழையை தொடர்ந்து, சுள்ளென்று வெயில்

37views
விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பரவலாக சாரல் மழை பெய்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. மேலும் கடந்த ஒரு வாரமாக வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இன்று காலையில் குளிர் காற்று சற்று குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அதிகாலையில் இருந்தே சுள்ளென்று வெயில் அடித்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறினர். வடகிழக்கு பருவமழை துவங்கிய போது விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், சில நாட்கள் பரவலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யும், நீர் நிலைகளுக்கு தண்ணீர்வரத்து இருந்து பெருகும் என்று நம்பிய நிலையில், திடீரென்று மழைப்பொழிவு முற்றிலும் நின்று போனது. இதனால் நீர் நிலைகளுக்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதால், விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர் நிலைகள் பெருகும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!