இந்தியா

166 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை : ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்

198views
ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்மூலம் ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார்.
ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (செப்.1) ஜெயா வர்மா ரயில்வே வாரியத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!