தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

56views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த வெளியில் செயல்பட்டு வந்ததால், மழைக்காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகமெங்கும் உள்ள நெல் மூடைகள் சேமிப்பு கிடங்குகளை பாதுகாப்பதற்காக , இரும்பினால் ஆன கூடாரங்கள் அமைத்து நெல் மூடைகளை பாதுகாக்க உத்தரவிட்டதையடுத்து, தோப்பூரில் அமைந்துள்ள கிட்டங்கியில் 18000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட நெல் மூடைகளை சேமிக்கும் அளவிற்கு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருவதை , தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறும் போது , தமிழ்நாடு முழுவதும் 213 கிட்டங்கியில் ரூபாய் 138 கோடியில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடாரங்களை அமைக்க உள்ளதாகவும், இதில் 106 இடங்களில் பணிகள் நிறைவடைந்து ரூபாய் 105 கோடியில் நடைபெற்ற இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.  புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரம் முதல் ஒரு மாத காலத்திற்குள் குடும்ப அட்டையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் உள்ள அரசு ரேஷன் கடையில் விற்பனை பணியாளர்கள் பற்றாக்குறை பற்றிய கேள்விக்கு
தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைக்கும் விற்பனையாளர் குறித்து விரைவில் அதற்கான மேற்கொண்ட பணிகள் நடைபெற்று விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அதற்குரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்கப்படும் என்றும் கூறினார்
ரேஷன் கடைகளில் அரிசி கடத்துவது சம்பந்தமான கேள்விகளுக்கு
ஏற்கனவே இது சம்பந்தமாக அனைவரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டுள்ளது அனேக இடங்களில் ரேஷன் கார்டு எஸ்ஐ கடத்துபவர்களை வாகன ஓட்டுனர் மற்றும் அனைவரையும் கைது செய்து மிகுந்த பாதுகாப்பு முறை செய்யப்பட்டு வருகிறது ஒரு சில ரேஷன் கடைகளிலேயே அரிசியை வாங்கி பக்கத்தில் மாவு விற்பவர் அவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள் அதனையும் தகுந்த நடவடிக்கை எடுத்து சரியான முறையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்வதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!