தமிழகம்

போடி,நகராட்சியின் அலட்சியம், கால்நடைகளை பாதையில் கட்டி வைப்பதால் குடியிருப்பு வாழ் குழந்தைகள் அச்சம்:

81views
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா ஏழாவது வார்டு பகுதியில் 10 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட தார்சாலையானது முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் காட்சியளித்து வருகிறது. போடி நகராட்சியிடம் கடந்த பத்து வருடங்களாக இப்பகுதியில் தார் சாலை அமைக்காததால் அத்தெருப் பகுதி வாழ் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக அப்பகுதி தனி நபர் ஒருவர் கால்நடைகளை பிரதான நடை பாதையில் கட்டி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல கண்டு(ம்) கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
அது சமயம், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக மக்களை அச்சுறுத்தி வரும் தனிநபருக்கு தகுந்த அறிவுரை வழங்கியும் தார்சாலை அமைத்து கொடுக்க முனைப்பு காட்ட வேண்டுமெனவும், மக்களின் குறிப்பாக குழந்தைகளின் அச்சுறுத்தலை போக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!