தமிழகம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கவே பணியாற்றி வருவதாகவும் , தனக்கு அரசு அதிகாரிகளும் , கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் பெண் என்றதால் எனக்கு சம்பளம் வழங்காமல், சலுகைகளை அளிக்க மறுப்பதாகவும் , நியாய விலை கடை பெண் ஊழியர் வேதனையுடன் பேட்டி.

151views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் , தமிழக அரசின் தைப்பொங்கல் இலவச பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் பெண் ஊழியர் சரஸ்வதி, நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
நான் கடந்த 2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், அன்று முதல் சரிவர ஊதியம் வழங்கப்படாமலும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் , அரசு அதிகாரிகளும் , கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் தனக்கு பாரபட்சம் காட்டி வருவதாகவும், தற்போது ஐந்து மாத காலமாக ஊதியம் வழங்காமல் மறுத்து வருவதாகவும் கூறிய அந்த பெண் ஊழியர்,  தமிழக அரசின் செயலுக்கு கலங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினால் , தற்போது பொங்கல் இலவச பரிசு தொகுப்பினை மக்களுக்கு வழங்குவதற்காக பணியாற்றி வருவதாகவும் , என் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணப்பட்டுவாடா செய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர், ஆனால் நான் மகிழ்ச்சியுடன் இல்லை எனவும், தன் குடும்பமும் மிகவும் பின்தங்கிய நிலையில் கஷ்டப்படுவதால் தமிழக முதல்வர் எனக்கு கிடைக்க வேண்டிய சலுகை தொகையையும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தையும் எனக்கு வழங்க வேண்டும்.   மேலும் குறித்து நேரத்தில் ஊதியம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு நியாய விலைக் கடை பெண் ஊழியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!