தமிழகம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற காலை முதல் பொதுமக்கள் நியாய விலை கடை முன் குவிந்தனர்

106views
மதுரை மாவட்டம் திருநகர், திருமங்கலம் பகுதியில் காலை முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு , பொது மக்கள் நியாய விலை முன் காலை முதல் குவிந்தனர்.திருநகர் பகுதியில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். இந்திராகாந்தி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில்  காலை 10 மணி முதல் நாள்தோறும் வருகிற 12ந் தேதி வரை, முன்பு வழங்கிய டோக்கன் விதிமுறைப்படி தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி ,சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூபாய் ரொக்க பணம் ஆயிரம் ஆகியவற்றை நியாயவிலைக் கடை முன்பு வழங்கினார்.  அரசு விதித்த விதிமுறைப்படி தரமான அரிசி |சர்க்கரை மற்றும் ஆறடி நீளம் உள்ள முழு கரும்பு உள்ளிட்டவற்றை பெற்று மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!