தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்.

92views
உயிர்கொல்லி நோய்களை உருவாக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பட மண்பாண்ட பொருட்களை பயன்படுத்திட மக்களிடையே விழிப்புணர்வு தேவை.
மண்பாண்ட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேருக்கு தமிழக அரசு வழங்கும் 5 ஆயிரம் நிதியை மேலும். நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு நிதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையங்குளத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இங்கு தயாராகும் மண்பானைகள்மானாமதுரை பரமக்குடி திருநெல்வேலி ராமநாதபுரம் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஆகியவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
தை மாதம் பிறப்பதையொட்டி தற்போது பொங்கல் பானைகள் தயாராகி வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா மண்பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்தனர் ஆனால் இன்றைய நவீன கால சூழ்நிலையில் சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைக்கின்றனர் இதனால் மட்பாண்ட விற்பனை குறைவாகவே உள்ளது பண்பாண்டத்தில் பொங்கல் வைத்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற ஐதிகம் உள்ளதாக மண்பாண்ட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மண்பானைகள் தயாரிக்க பயன்படும் களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளதாகவும், அதிகாரிகள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சரளமாக கிடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளை கொண்டாட பாரம்பரியமுறையில் மண்பானை மற்றும் மண் அடுப்புகளில் சமைத்தால் பாரம்பரிய முறையும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்கை தரம் உயரும்.

பிளாஸ்டிக் பொருட்களால் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன் படுத்துவதால் சுற்றச் சூழல் பாதிப்படைவதுடன், கேன்சர் போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவுவதை தடுக்க மக்கள் மண்பாண்ட பாத்திரங்களை பயன்படுத்தினால் நலமுடன் வாழ வழி வகுக்கும்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!