தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,வெல்லம் கொடுக்க கோரி பாஜக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

40views
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.  2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் ,இந்த வருடம் பல்வேறு விமர்சனங்களின் எதிரொலியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் கரும்பு வெள்ளம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட விவசாய அணி மாவட்டத் தலைவர் துரை பாஸ்கர் முன்னிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு மற்றும் வெள்ளம் வழங்க வேண்டும்,மேலும் 2000 ரூபாய் பரிசு தொகை வழங்க வேண்டும். குறிப்பாக கரும்பு மற்றும் வெள்ளத்தை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக விவசாய அணியினர் கையில் கரும்புகளை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
செய்தியாளர் : வி.காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!