தமிழகம்

நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்

100views
நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் பொன்தமிழ் விடியல் மாமன்றம் இணைந்து பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் வெகுசிறப்பாக பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர் ராகுல் கோல்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும், தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை முனைவர் ரவி சேசுராஜ் மற்றும் பாப்பாக்குடி பாவலர் முருகன் தலைமையில் கவியரங்கமும் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை துணை முதல்வர் அருட்தந்தை அருள்ரவி அவர்களுக்கு ஸ்டண்ட் மூலமாக செய்த சமூக சேவையை பாராட்டி சிறந்த சமூக சேவகர் 2022 விருது வழங்கப்பட்டது. முகநூல் நண்பர்கள் குழு மூலமாக சமூக சேவை ஆற்றிவரும் டேவிட் ராஜா அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் கலாம் உலகச் சாதனை நிகழ்வை முன்னிட்டு நடத்திய வெ. பானுமதி அவர்களுக்கு அப்துல் கலாம் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக கவியரங்கில் பங்கேற்றவர்களுக்கும் பட்டிமன்றத்தில் பேசியவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காவல் உதவி ஆய்வாளர் வெள்ளைத்துரை மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்களும் கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!