இந்தியா

பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய சாதனை… முதன்முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு நவீன சிகிச்சை

57views
முதன் முறையாக கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிறக்கும் முன்பே உயிர் காக்கும் வகையில் மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்த ப்பட்டது‌.  ஐரோப்பிய மற்றும்  வட அமெரிக்கா நாடுகளை தவிர உலகின் முதன் முறையாக இந்த சிகிச்சை மேற்கொள்ள ப்படுவது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற உயர் சிகிச்சை பிறக்க போகும் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெற்றோருக்கு ஒர் வரப்பிரசாதமாகும்.
பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் தமிழக பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் 27வாரங்கள் கடந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார்.அவருக்கு ஸ்கேன் செய்த போது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு கழுத்தின் முன் பகுதியில் மிக பெரிய கட்டி ஒன்று இருப்பதும் அது மூச்சு குழாயை அடைக்கும் வகையில் இருந்ததோடு, அதிக ரத்த நாளத்தோடு இருப்பதும் இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மருத்துவக் குழுவினர் கலந்து ஆலோசித்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு FETI என்னும் முறையை பயன்படுத்தி குழந்தையின் மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்த முடிவு செய்தனர்.இதில் தோல்வி ஏற்பட்டால்  EXIT என்கிற மாற்று முறையில் சிகிச்சை தொடர முடிவெடுத்தனர்.  இதில் தாய்க்கும் சேய்க்கும் உள்ள அபாயம் குறித்தும் விளக்கி கூறினர். இறுதியில் FETI முறையில் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு கழுத்தின் முன் பகுதியில் இருந்த கட்டியையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. உயிர் காக்கும் இந்த உயர் சிகிச்சை முறையில் மகப்பேறு மருத்துவத் தலைவர் மேரி டேனியல் மற்றும் லால் பகதூர் பாலோ, கரு மருத்துவ துறை மருத்துவ நிபுணர் மணிகண்டன்,(Fetal clinic) மயக்கவியல் துறை மருத்துவர் சிவக்குமார் குழந்தை நல மருத்துவர்கள் பீட்டர் பிரஷாந்த் டாக்டர் நிஷாந்த் டாக்டர் உமா மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் சித்தானந்த் , குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நிர்மல், மற்றும் மோனிகா உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர்.
இது குறித்து மகப்பேறு மருத்துவர் மேரி டேனியல் பேசும் போது, கரு மருத்துவ நிபுணர் டாக்டர் மணிகண்டன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை யுடன் முதன் முறையாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார். மருத்துவ குழுவினரை மெட்ராஸ் நிர்வாக குழுவினர் மற்றும் பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!