இந்தியா

திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றது!

10views
புதுச்சேரி, [25-01-2025]: தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் உலகத் திருக்குறள் மையம் இணைந்து நடத்திய ‘திருக்குறள் உலகச் சாதனை மாநாடு’ புதுச்சேரியில் உள்ள ஒயிஸ்மேன் பள்ளிக்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ‘திருவள்ளுவரின் நம்பிக்கையியல் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், கலைமாமணி டாக்டர். எஸ். சரோஜா பாபு, உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர், தலைமை உரையாற்றினார். திருமதி இலட்சுமி மௌலி, ஆங்கிலோ இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகி சிறப்புரையாற்றினார். கவிதாயினி கலாவிசு, கவிதை வானில் கவிமன்றம் தலைவர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் கி.சத்யா, ஆய்வரங்கத் தலைமை தாங்கினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல திறமையான ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, திருவள்ளுவர் சிந்தனைகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தனர்.
திருக்குறள் உலகச் சாதனை மாநாடு, திருக்குறளை ஒரு உலக நூலாக உயர்த்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த மாநாடு, திருக்குறள் ஆய்வில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளுக்கு வித்திட்டிருக்கிறது.
இந்த நிகழ்வை முனைவர் ஆ.முகமது முகைதீன், தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் துபாயிலிருந்து செயலாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!