தமிழகம்

மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக 20000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் சத்ய ஜீத் பதக்கிற்கு மதுரையில் வரவேற்பு

116views
இந்தியா முழுவதும் 20000 கிலோமீட்டர் மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் சத்யஜித் ப தக்கிற்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தியாவை சேர்ந்தவர் சத்யஜித் பதக்( வயது 35) இவர் இந்தியா முழுவதும் உலக அமைதி மற்றும் மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் ஏழாம் தேதி அலகாபாத்தில் இருந்து புறப்பட்ட இவர் பீகார் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் ஒடிசா ஆந்திரா, பாண்டிச்சேரி வழியாக தமிழ்நாடு வந்தடைந்தார் தமிழகத்தில் காஞ்சிபுரம் திருச்சி வழியாக இன்று மதுரை வந்தார் .
20 ஆயிரம் கிலோ மீட்டர் மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இவர் இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் காந்தி மியூசியம் ஆகியவற்றை தரிசனம் செய்தார். மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்தியஜீத் பதக் அவர்களுக்கு காந்தி மியூசியத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மாலை அணிவித்து கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஐந்து மாதத்தில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார் மேலும் 2008 ஆம் ஆண்டில் செகந்திராபாத் முதல் அலகாபாத் வரை 2200 கிலோமீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இதுவரை 40 முறை ரத்ததானம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!