தமிழகம்

ராஜபாளையத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

116views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஆண்டு ஜுன் மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
வழக்குபதிவு செய்த போலீசார், சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி சக்திவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!