தமிழகம்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் செயல்பாடுகள்

36views
தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் தயாரிக்கும் போட்டி மாணவ மாணவியருக்குநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அனைத்து பள்ளிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்காத குப்பைகளில் இருந்து அழகு சாதன பொருட்கள் பொம்மைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்தனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாகபரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செல்வராணி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!