தமிழகம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை, தமிழக முதல்வர் ஆக்கிட வலியுறுத்தி விரைவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் – பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

35views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை தமிழக முதல்வராக்கிட வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கன்னையா, மாவட்ட செயலாளர் வீரக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி யேந்திரன், சோலைமுத்து, மாவட்ட பொருளாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் தெய்வம், மகேஸ்வரன், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜாராம் வரவேற்றார். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் ,மாநில பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் கவிஞர் திலகபாமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .
மேலும் நிர்வாகிகள் நடராஜன் ,செந்தில்குமார், ராஜ்குமார், செல்வம், மாரிச் செல்வம் ,மதுரை வீரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் , மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, திருமங்கலம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட் – ஐ அகற்றிட வேண்டும், திருமங்கலம் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும், புதிய வெளியூர் பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும், ஐ.நா – வில் பாராட்டு பெற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை தமிழக முதல்வராக்கிட வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விரைவில் நடை பயணம் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் தெய்வம் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!