தமிழகம்

அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில்.42 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

305views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வலையபட்டி ஊராட்சி மற்றும் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகளை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வடக்குமாவட்ட திமுக அவைத் தலைவர் எம் ஆர் எம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன். வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதய சந்திரன். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் அலங்காநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ். பாலமேடு பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் . ஒன்றிய கவுன்சிலர் பவானி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கான இலவச பொது கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது தொடர்ந்து வலையபட்டி ஊராட்சிக்குட்பட்ட சாத்தவு கோவில் பகுதியில் பிளவர் பிளாக் நடைபாதை வலையபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
இராம கவுண்டபட்டி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக ரேஷன் கடை இல்லாத சூழ்நிலை இருந்து வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளரிடம் இந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பல ஆண்டுகளாக ரேஷன் கடை இல்லாத காரணத்தினால் பக்கத்து கிராமத்திற்கு நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று பொருள்கள் வாங்கி வருவதாக தெரிவித்தனர்.
திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த கிராமத்திற்கு பகுதி நேர ரேசன் கடை அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் பெயரில் தற்பொழுது வாடகை கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கிராமத்தில் புதிய ரேசன் கடை கட்டி தரப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு, பல கிலோமீட்டர் நடந்து சென்று பொருள்கள் வாங்கி வந்த சூழ்நிலை இருந்தது. திமுக அரசு அமைந்தவுடன் ரேஷன் கடை மற்றும் அரசு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தந்ததற்கு கிராம் பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பி மூர்த்தி. வெங்கடேசன் எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பரந்தாமன் பாலமேடு நகர செயலாளர் மனோகரன்வேல் பாண்டியன் .யூனியன் ஆணையாளர்கள் கதிரவன் பேராட்சிபிரேமா. பொறியாளர் துரைக்கண்ணு உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!