தமிழகம்

திருமங்கலம் அருகே உடைகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுயநலத்திற்காக சமூக விரோதிகள் வெளியேற்றியதால் விவசாயிகள் வேதனை – விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கண்மாய் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.

101views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குதிரைசாரிகுளம் கண்மாயில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையினாலும் வைகைநீரில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டதாலும் கண்மாய் நிரம்பி வழிகிறது , இதனைத் தொடர்ந்து அங்குள்ள உடைகுளம் கண்மாயிலும் நீர் பெருக்கெடுத்து வருகிறது.

இதனை சில சமூக விரோதிகள் தங்களது சுயநலத்திற்காக உடைகுளம் கண்மாயில் இருந்து தண்ணீரை வெளியேற்றி , தண்ணீரை வீணடிப்பதாகவும் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குடிநீரை விற்கும் தொழிற்சாலைகளை சார்ந்த சிலர் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள், திருமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தங்களது கோரிக்கை மனுவை அழித்தனர் .  விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கண்மாய் தண்ணீரை காக்க வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!