தமிழகம்

வேடசந்தூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு உறுதிமொழி & மனித சங்கிலி பேரணி

216views
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை காவல் துறையுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு மற்றும் உறுதி மொழியுடன் கூடிய மனித சங்கிலி பேரணியை நடத்தியது.
வேடசந்தூர் ஆத்து மேடு முதல் அம்பேத்கார் சிலை வரை இப்பேரணி நடைபெற்றது.
அமைதி அறக்கட்டளையின் திட்ட மேலாளர் வே.பவித்ரா வரவேற்புரை ஆற்றினார்.அமைதி அறக்கட்டளையின் தலைவர் பா.ரூபபாலன், மேலாளரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் ஆ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கா.மேகலா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் செல்வி.துர்காதேவி அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார்கள்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மா.அமுதகலா, தலைமை காவலர் சித்திரை செல்வி, சகி ஒருங்கிணைந்த சேவை மைய சமூக நலத்துறை, புதுக்கோட்டை தலைவர் குப்புச்சாமி, குடகனாறு தலைவர் ராமசாமி, போக்குவரத்து ஆய்வாளர் ஞானதிரவியம், சார்பு ஆய்வாளர்கள் வேல்மணி, பாண்டியன், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர்கள் வாழ்த்தூரை வழங்கினார்கள். வழக்கறிஞர் ராஜ செல்வம், மாவட்ட பயிற்றுநர் ஆதிமூலம் ஆகியோர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

இறுதியில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைதி அறக்கட்டளை பணியாளர் சுகன்யா நன்றியுரை கூறினார்கள். பணியாளர்கள் நாகலட்சுமி, சசிகலா மணிமேகலை, திவ்யா, ஜெயபிரியா, கோகிலா, ரேணுகா தேவி, முத்தமிழ் செல்வி, முனியாண்டி, மணிமாறன் ஆகியோர்கள் கூட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்தார்கள். முகாமில் 100 கிராமங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!