தமிழகம்

தேனி அல்லிநகரம் நகராட்சி எட்டாவது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் உயிர் பலி ஏற்படும் முன் *அல்லிநகரம்  நகராட்சி* நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

38views
1. ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி குழந்தைகள் கடந்து செல்லும் ரோட்டின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி கடந்த நான்கு நாட்களாக உள்ளே உடைந்து விழும் நிலையில் உள்ளது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உயிர் பலி ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் தகுந்த பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்…

2.. மழைக்காலங்களில் கழிவு நீர் செல்லக்கூடிய பாதைகளில் ஆக்கிரமிப்பின் காரணமாக கழிவுநீர் கால்வாயில் செல்லாமல் மக்கள் நடந்து செல்லும் பாதையில் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது தனி நபர்கள் சிலர் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமித்துக் வீட்டுடன் இணைத்துக் கொண்டதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்றி நகராட்சி நிர்வாகத்தின் கழிவுநீர் கால்வாயை செயல்முறை படுத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்…

3.. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மையப் பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை மொத்தமாக கொட்டி வைத்து வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் வந்து அள்ளும் நிலைமை உள்ளதால் அதனை விரைவாக அப்புறப்படுத்தி பெரியவர்களுக்கும் தொற்றுநோய் பரவாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தனி நபர்கள் சிலர் சுமார் 4 அடி வரை மைய சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் அவர்களுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொண்டதால் சாக்கடை கால்வாய் காணவில்லை அதையும் மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு அல்லிநகரம்நகராட்சி நிர்வாகத்திற்கு பணிவான வேண்டுகோள்.

செய்தியாளர் : A. சாதிக் பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!