தமிழகம்

சின்னமனூர் வட்டார அளவில் கலை பண்பாட்டுத் திருவிழா

128views
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்தில் 2022-23ம் ஆண்டிற்கான கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளானது மாணவ மாணவியர்தம் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபர் போட்டியாக நேரடியாக ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் அக்.27,28 மற்றும் 31 ஆகிய மூன்று தினங்களில் திட்டமிடப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் எனதாக தனித்தனியாக நடைபெற்று வருகிறது.
கலை பண்பாட்டு திருவிழா போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனிராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சகாயராஜ் தொடங்கி வைத்தார்கள்.
போட்டிகளுக்கு பொறுப்பாசிரியர்களாக கன்னிகா, நாகலெட்சுமி, சுப்புரமணி ஆகியோர் செயல்பட்டனர்.
மேலும்,ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கிய மரியான நான்சி, சாமுண்டீஸ்வரன், லூக்கா, பாக்கிய ஜெயந்தி ஆகியோர் உடனிருந்து சிறப்பாக வழி நடத்தினார்கள்.
வாய்ப்பாட்டிசை ( CLASSICAL), வாய்ப்பாட்டிசை (FOLK),கருவி இசை (தாள வாத்தியம்),கருவி இசை (மெல்லிசை) உள்ளிட்ட போட்டிகள் 27.10.22 அன்று நடைபெற்றது.
நடனம் செவ்வியல், நடனம் பாரம்பரிய நாட்டுப்புற வகை, நாடகம் தனிநபர் நடிப்பு போன்ற போட்டிகள் 28.10.22 அன்று நடைபெற்றது.
காட்சிக்கலை (இரு பரிமாணம்), காட்சிக்கலை (முப்பரிமாணம்), உள்ளூர் தொன்மை பொம்மைகள் போன்ற விளையாட்டு போட்டிகள் அக்.31 அன்று நடை பெறவிருக்கிறது
நடைபெற்ற போட்டிகளின் நடுவர்களாக நாகலட்சுமி, மேரி மார்கெட், ராமசந்திரன், அரவிந்த்,உமாநாத், சோமநாதன்,பிரியா, சுப்புரமணி மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் முதலாவதாக வரும் மாணவ/மாணவிகளை தேர்வு செய்தனர்.
இதில்,தேர்வு செய்யப்படும் மாணவ/மாணவிகள் மாவட்ட அளவில் 2022 நடைபெறும் போட்டிக்காக தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள THNU MARTRIC HR.SEC பள்ளிக்கு அடுத்த கட்ட போட்டிகளுக்காக செல்ல உள்ளார்கள் என வட்டார வள மைய அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!