தமிழகம்

திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் பாவை விழா நடைபெற்றது

154views
பாவை விழாவில் கல்லூரி மாணவர்கள் நாட்டியம், நாடகம், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்.  பேராசிரியர்.சொ.மீ சுந்தரம் “ஒங்கி வளர்ந்த உத்தமன்” என்ற தலைப்பில் மனிதர்கள் மனிதராய் வாழவேண்டும் என்ற கருத்தினை மாணவர்களிடம் பதிவு செய்தார்.  கல்லூரி செயலாளர் விஜயராகவன் முதல்வர்  தமிழ்த்துறை தலைவர் பரிமளா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் பேசிய செயலாளர் விஜயராகவன் கூறுவையில் தமிழ் மரபினை போற்றும் விதமாகவும் நமது பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!