நோக்கியா தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் டேப்லெட்களையும் சேர்க்க உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆனது விரைவில் சந்தையில் வரவிருக்கிறது.
நோக்கியா (Nokia) மொப்பில் வெளியான அறிக்கையின்படி, நோக்கியா டி20 (Nokia T20) என்று பெயரிடப்படும் மற்றும் அடுத்த நிகழ்வில் நோக்கியா டேப்லெட் உடன் சேர்ந்து பல வகையான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்படும். ரஷ்யாவில் வெளிப்படையாகப் பெறப்பட்ட ஒரு சாதன சான்றிதழின் வழியாக நோக்கியா டி 20 டேப்லெட் பற்றிய இந்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.
நோக்கியா டி 20 டேப்லெட்டைப் பற்றியா முழு விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை, இருந்தாலும் இதுவரை கிடைத்த தகவல்களின்படி இதில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் நோக்கியா டி 20 டேப்லெட்டில் மிகவும் பெரிய டிஸ்பிளே இருக்கூடும்.
மேலும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா டி 20 டேப்லெட் ஆனது வைஃபை மற்றும் எல்டிஇ வகைகளில் மட்டுமே வழங்கப்படும். அத்துடன் நோக்கியா டி 20 எல்டிஇ மாறுபாடு ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,000 க்கும், அதே நேரத்தில் வைஃபை ஒன்லி மாறுபாடு ஆனது தோராயமாக ரூ.19,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த டேப்லெட்டை ஆண்டின் இறுதியில் அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.