தமிழகம்

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு 6 கிராம மக்கள் எதிர்ப்பு. மறியல் போராட்டம் நடத்த முடிவு.

36views
அகில இந்திய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவின் படி மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஆனாலும் பாம்பனில் மூன்று மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளுக்கு தினமும் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்களின் வருவதால் முக்கிய வீதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. மதுக்கடைகளுக்கு முன்பாகவே மதிப்பிரியர்கள் மது அருந்திவிட்டு விரும்பத் தகாத முறையில் நடந்து கொள்வதால் பள்ளி மாணவி மாணவிகள் மற்றும் பெண்களும் இந்தப்பகுதியில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். எனவே இந்த நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகத்தின்மூலம் டாஸ்மாக் நிர்வாகம் தங்கச்சிமடம் பேக்கரும்பில் குறிப்பாக மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் அருகே புதிதாக மதுக்கடை திறக்க இடம் தேர்வுசெய்து வருகிறது.
ராமேஸ்வரம் தீவின் புனிதத்தை காக்க மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளநிலையில் தங்கச்சிமடம் ஊராட்சியில் தீவுமக்கள் புனித இடமாகப்போற்றும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் அருகே புதிதாக மதுக்கடை திறப்பதற்கு பேக்கரும்பு, தென்குடா, அரியாங்குண்டு, சந்தியாநகர், நொச்சிவாடி, தண்ணீர்ஊற்று உள்ளிட்ட 6 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 6 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி எந்தநிலையிலும் தங்கச்சிமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடை திறக்க விடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடத்தில் புதிதாக மதுக்கடை திறக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி 7 கிராம மக்கள் தங்கச்சிமடம் ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
இதனைமீறி இப்பகுதியில் மதுக்கடை திறக்க முற்பட்டால் மதுக்கடை திறப்பதை தடுத்து நிறுத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை வலியுறுத்தி அனைவரும் அறியும் வகையில் தீவுமுழுவதும் கிராம மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர். இது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!