தமிழகம்

புதிய வழித்தடங்களில், அரசு பேருந்துகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்

120views
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி, கொடிமங்கலம் ஊராட்சிகளில் , மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்ததார்.
பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்றாக சாலைப் போக்குவரத்து உள்ளது. ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லவும் மாணவ மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் பொதுப் போக்குவரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஊராட்சி ஒன்றியம்
சத்திரப்பட்டி ஊராட்சியில் (அமெரிக்கன் கல்லூரி அருகே) பெரியார் நிலையம் – கடவூர் (சிம்மக்கல்
எம்ஜிஆர் பேருந்து நிலையம் கடச்சநேந்தல் ஊமச்சிகுளம் வழியாக) மற்றும் கொடிமங்கலம் ஊராட்சியில் பெரியார் நிலையம் – கொடிமங்கலம் (சிம்மக்கல் கோரிப்பாளையம் அய்யர் பங்களா ஊமச்சிகுளம் வழியாக) என 2 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொடிமங்கலம் ஊராட்சியில் உள்ள பிருந்தாவன் கார்டன் குடியிருப்பு பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ரூ.7.63 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெ.இளங்கோவன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வீரராகவன், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அருகே சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில், பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், அடிக்கடி பஸ்கள் பல பழுதாகி சாலைகளில் நின்று விடுவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், பஸ் போக்குவரத்து பாதிப்பதுடன், சோழவந்தானிலிருந்து- மதுரை அண்ணா நிலையத்துக்கும், மதுரை அண்ணா நிலையத்திலிருந்து- சோழவந்தானுக்கும் பஸ்சுக்காக பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவுகிறதாம்.
ஆகவே, மதுரை போக்குவரத்துக் கழக நிர்வாகமானது , உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!